
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிபிஎல் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணிக்கு நிக் மேடின்சன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுமுனையில் சாம் ஹார்பர் 11 ரன்களிலும், ஜேக், ஆரோன் ஃபிஞ்ச், ஜானதன் வெல்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இருப்பினும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிக் மேடின்சன் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய மேடின்சன் 49 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் மொத்தம் 87 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து வெளியேறினார்.