பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தில் ரெனிகேட்ஸ் த்ரில் வெற்றி!
மெல்பர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிக் பேஷ் லிக்கின் பரபரப்பான போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி கடைசி ஓவரில் 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மெல்பர்னில் இன்று நடந்த மெல்பர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் (11) மற்றும் ஜேக் ஃபிரேசர் (1) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Trending
ஆனால் 3ஆம் வரிசையில் இறங்கிய சாம் ஹார்ப்பெர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கையோடு, 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்வரிசையில் வெல்ஸ் அதிரடியாக விளையாடி 24 பந்தில் 44 ரன்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் லியாம் ஹாட்சர், பிராடி காஃச் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, 163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோ கிளார்க் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 37 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் அடித்து கிளார்க் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான தாமஸ் ரோஜர்ஸ் 27 ரன்களும், கார்ட்ரைட் 12 ரன்களும், வெப்ஸ்டெர் 29 ரன்களையும்ச் சேர்த்து நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றத்தவறினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹின்ச்லிஃப் (1), செய்மார்(3), லுக் உட்(1) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இருப்பினும் கடைசி ஓவரில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை வீசிய சதர்லேண்ட் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. ரெனிகேட்ஸ் தரப்பில் டாம் ரோஜர்ஸ், கேன் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி6 ரன் வித்தியாசத்தில் மெல்பர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now