
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று நடந்த லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர்கள் காலின் முன்ரோ மற்றும் ஜோஷ் பிரௌன் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இதில் காலின் முன்ரோ 26 பந்தில் 45 ரன்களும், ஜோஷ் பிரௌன் 21 பந்தில் 34 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் 27 ரன்களும், பியர்சன் 23 ரன்களும் அடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது. பெர்த் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.