
BBL 12: Perth Scorchers win by 3 wickets after falling apart in the middle! (Image Source: Google)
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய ஹென்றி ஹண்ட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கிறிஸ் லின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 ரன்களைச் சேர்த்தார்.
பின்னர் களமிறங்கிய ஆடம் ஹோஸ், காலின் டி கிராண்ட்ஹோம், தாமஸ் கெல்லி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களைச் சேர்த்தனர். பெர்த் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.