
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த சிட்னி தண்டர் அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் மேத்யூ கில்க்ஸ், ரைலீ ரூஸோவ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் - ஒலிவியர் டேவிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் கடந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 68 ரன்களில் ஆட்டமிழக்க,ஒலிவியர் டேவிஸ் 42 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை மட்டுமே சேர்த்தது.