பிபிஎல் 2023: மீண்டும் மிரட்டிய ஸ்மித்; சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தும் கூட, ஒரு பக்கா டி20 வீரராக ஸ்டீவ் ஸ்மித் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் தான் ஐபிஎல்லில் கூட, கேப்டன்சியை இழந்தபின்னர் அவர் ஆடிய அணிகளில் அவருக்கு ஆடும் லெவனில் நிரந்தர இடம் கிடைத்ததில்லை.
இந்நிலையில், நடப்பு பிக்பேஷ் டி20 லீக் தொடரில் தன்னாலும் அதிரடியாக விளையாட முடியும் என்பதை 2 சதங்கள் விளாசி நிரூபித்துள்ளார் ஸ்மித். சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித், அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்(101) மற்றும் சிட்னி தண்டர் (125) அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து 2 சதங்களை விளாசி சாதனை படைத்த ஸ்மித்.
Trending
இந்நிலையில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் அவர் பட்டையை கிளப்பியிள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஹாபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜோஷ் பிலீப், பேட்டர்சன், கெர், கிறிஸ்டியன் என அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் மட்டும் அதிரடியாக விளையாடி இப்போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார். அதுமட்டுமின்றி இப் போட்டியில் 33 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மித் 6 சிக்சர், 4 பவுண்டரிகள் என 66 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் பேட்டிங்கின்போது 2ஆவது ஓவரை ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பவுலர் ஜோயல் பாரிஸ் வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தில் மட்டும் 16 ரன்கள் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு கிடைத்தது.
3வது பந்தை ஜோயல் பாரிஸ் நோ பாலாக வீச, அதில் ஸ்மித் சிக்ஸர் அடித்தார். அதற்கு வீசப்பட்ட ரீபாலை வைடாக வீச அது பவுண்டரிக்கு சென்றது. எனவே இதுவரை மொத்தமாக 12 ரன்கள் கிடைத்தது. மீண்டும் அதற்கு ரீபால் வீச, அதை ஸ்மித் பவுண்டரிக்கு அனுப்ப, அந்த பந்தில் மட்டும் 16 ரன்கள் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு கிடைத்தது.
இதன்மூலம் 20 ஒவார்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. ஹாபர்ட் அணி தரப்பில் பேட்ரிக் தூலே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் ஸாக் கிரௌலி 49, டிம் டேவிட் 24, நாதன் எல்லீஸ் 20 ரன்கள் என சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்களில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் ஆட்டாநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now