பிபிஎல் 2022: ரெனிகேட்ஸை வீழ்த்தி சிக்சர்ஸ் அபார வெற்றி!
பிக்பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று ஜீலாங்கில் நடந்த போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் 12,கேப்டன் மேடின்சன் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து சொதப்பினர். அதன்பின் 3ஆம் வரிசையில் விளையாடிய ஷான் மார்ஷ் 29 பந்தில் 35 ரன்கள் அடித்தார்.
Trending
அவரைத் தொடர்ந்து வந்த ஆரோன் ஃபின்ச் 17 ரன் மட்டுமே அடித்தார். இறுதில் வெல்ஸ் 28 ரன்கள் அடிக்க,ரெனெகேட்ஸ் அணியில் எந்த வீரருமே பெரிய இன்னிங்ஸ் விளையாடாமல் சொதப்பியதால் 20 ஓவர்கள் முடிவில் மென்ல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதையடுத்து 125 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியிலும் தொடக்க வீரர் ஜோஷ் பிலீப் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த குர்டில் பேட்டர்சன் - ஜேம்ஸ் வின்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்டர்சன் 38 ரன்களும், ஜேம்ஸ் வின்ஸ் 39 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஹென்றிக்ஸும் 2 ரன்களோடு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.
பின்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேனியல் கிறிஸ்டியன் 15 பந்தில் 21 ரன்கள் அடிக்க, 17.5ஆவது ஓவரில் சிட்னி சிக்சர்ஸ் அணி இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now