
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று மெல்பர்னில் நடந்த போட்டியில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணியில் மார்டின் கப்டில், ஷான் மார்ஷ் மற்றும் ஹார்வி ஆகிய மூவரும் தலா 32 ரன்கள் அடித்தனர். கப்டில் 27 பந்தில் 32 ரன்களும், ஷான் மார்ஷ் 35 பந்தில் 32 ரன்களும், ஹார்வி 23 பந்தில் 32 ரன்களும் அடித்தனர். ஆரோன் ஃபின்ச் ஒரு ரன் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார்.
அதேசமயம் மற்ற வீரர்கள், டிரெண்ட் போல்ட் மற்றும் லுக் உட்டின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களுக்கு சுருண்டது. மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் டிரெண்ட் போல்ட் மற்றும் லுக் உட் இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.