
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹாபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சிட்னி அணிக்கு பான்கிராஃப்ட் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஹேல்ஸ் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கார்ட்மோரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான்கிராஃப்ட் 21 ரன்களுக்கும், ஒலிவியர் டேவிஸ் 20 ரன்களுக்கும், அலெக்ஸ் ரோஸ் 14 ரன்களிலும், டேனியல் சாம்ஸ் 25 ரன்களுக்கு மெக்கண்ட்ரூ 7 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இறுதியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் கிறிஸ் கிரீன் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி தரப்பில் பேட்ரிக் தூலே, கிறிஸ் ஜோர்டன், நிகில் சௌத்ரில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.