-mdl.jpg)
பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கான்பெர்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கு ஜோஸ் பிரௌன் - காலின் முன்ரோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரௌன் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மெக்ஸ்வீனி 29 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான காலின் முன்ரோ அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து களமிறங்கிய ரென்ஷா 20, சாம் பில்லிங்ஸ் 23 ரன்களும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. சிட்னி தண்டர் அணி தரப்பில் தன்வீர் சங்கா 3 விக்கெட்டுகளையும், ஸமான் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.