Advertisement

பிபிஎல் 13: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 29, 2023 • 21:12 PM
பிபிஎல் 13: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
பிபிஎல் 13: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு மெல்போர்ன் ரெனிகேட்ஸ்! (Image Source: Google)
Advertisement

பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஸ்டிரைக்கர்ஸ் அணியில் தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டி ஆர்சி ஷார்ட் - கிறிஸ் லின் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

Trending


பின் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என கிறிஸ் லின் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வெதர்லாட் ரன்கள் ஏதுமின்றியும், ஆடம் ஹோஸ் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த டி ஆர்சி ஷார்ட்டும் 54 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. மெல்போர்ன் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் முதல் பந்திலேயும், ஜோ கிளார்க் 28 ரன்களிலும் என பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த ஜேக் ஃபெரசர் - ஷான் மார்ஷ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர். பின் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 70 ரன்களைச் சேர்த்து ஜேக் ஃபெரசர் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜானதன் வெல்ஸ், மேக்கன்ஸி ஹார்வி, வில் சதர்லேண்ட் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 54 ரன்களைச் சேர்த்திருந்த ஷான் மார்ஷும் ஆட்டமிழந்தார். 

இருப்பினும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement