Advertisement
Advertisement
Advertisement

பிபிஎல் 13: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது சிட்னி சிக்சர்ஸ்!

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 22, 2023 • 20:22 PM
பிபிஎல் 13: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது சிட்னி சிக்சர்ஸ்!
பிபிஎல் 13: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது சிட்னி சிக்சர்ஸ்! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ஆடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் ஜோஷ் பிலீப் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வின்ஸ் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிலீப் 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய டேனியல் ஹூயுக்ஸ் ஒரு ரன்னிலும், கேப்டன் ஹென்றிக்ஸ் 22 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Trending


அதன்பின் களமிறங்கிய ஜோர்டன் சில்க் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோர்டன் சில்க் 66 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிச்கர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைக் குவித்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் தொடக்கம் வீரர் டி ஆர்சி ஷார்ட் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ ஷார்ட் - கிறிஸ் லின் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் மேத்யூ ஷார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் லின் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜேக் வெதர்லேண்ட், ஆடம் ஹோஸ் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து மாறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த மேத்யூ ஷார்ட்டும் 55 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து வந்த ஜேமி ஓவர்டன் அதிரடியாக விளையாடி 31 ரன்களை எடுத்த நிலையிலும் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசனில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement