Jordan silk
பிபிஎல் 2024-25: சிக்ஸர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹரிக்கேன்ஸ்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஹோபர்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் அணிக்கு கலெப் ஜூவெல் - மிட்செல் ஓவன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடிய மிட்செல் ஓவன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மேத்யூ வேட் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு தொடக்க வீரர் கலெப் ஜூவெல் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பென் மெக்டர்மோட் மற்றும் டிம் டேவிட் இணை அதிரடியாக விளையாட முயற்சித்தனர்.
Related Cricket News on Jordan silk
-
BBL 2024-25: பரப்பான ஆட்டத்தில் தண்டர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: சிட்னி தண்டர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது சிட்னி சிக்சர்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பிபிஎல் 2023: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
சிட்னி தண்டருக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47