
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் ஆணிக்கு மிட்செல் ஓவன் - கலெப் ஜுவெல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஓவன் 8 ரன்னிலும், ஜுவெல் 22 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷய் ஹோப் மற்றும் பென் மெக்டொர்மோட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் மெக்டர்மோட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் நிகில் சௌத்ரீ 20 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பென் மெக்டர்மோட் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 68 ரன்களையும், கிறிஸ் ஜோர்டன் 17 ரன்களையும் சேர்த்தனர்.