
பிக் பேஷ் லீக் 2024-25 தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 68 ரன்களைச் சேர்த்தார்.
அவரைத் தவிர, கிளென் மேக்ஸ்வெல் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் எடுத்தார். சிட்னி அணி தரப்பில் ஜாக்சன் பேர்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பைன் இலக்கை நோக்கி விளையடைய சிட்னி சிக்சர்ஸ் அணியனது ஜேம்ஸ் வின்ஸின் அபாரமான சதத்தின் மூலம் 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இதமூலம் அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 58 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 101 ரன்களையும், ஜோஷ் பிலீப் 42 ரனக்ளையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில், இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ஜேம்ஸ் வின்ஸ், ஸ்டார்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லின் ஓவரை பிரித்து மேய்ந்துள்ளார்.