
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிக்கேட்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுதாக அறிவித்து பிரிஸ்பேன் ஹீட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு நாதன் மெக்ஸ்வீனி - ஜேக் வுட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மெக்ஸ்வீனி 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜேக் வுட்டுடன் இணைந்த மேத்யூ ரென்ஷாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜேக் வுட் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 45 ரன்களையும், மேத்யூ ரென்ஷா 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்தும் விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து களமிறங்கிய டேனியல் ட்ரீவ் 16 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய அல்சாப் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய மேக்ஸ் பிரைண்ட் 12 ரன்கலையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களைச் சேர்த்து அசத்தியது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தரப்பில் ஆடம் ஸாம்பா மற்றும் கலம் ஸ்டோவ் ஆகியோர் தலா 2 விக்கெட்ட்களை கைப்பற்றினர்.