பிபிஎல் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு அலெக்ஸ் கேரி - கேப்டன் மேத்யூ ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் அதிரடியாக தொடங்கிய அலெக்ஸ் கேரி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்த கையோட் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஒல்லி போப்பும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் மேத்யு ஷார்ட்டுடன் இணைந்த லியாம் ஸ்காட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ ஷார்ட் 40 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த லியாம் ஷாட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Trending
அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய அலெக்ஸ் ரோஸ் 6 ரன்களுக்கும், ஹாரி மனெட்டி 3 ரன்னிலும், டி ஆர்சி ஷார்ட் 10 ரன்னிலும், பிராண்டன் டக்கெட் 2 ரன்னிலும் என ஆட்டமிழக்க, லியாம் ஸ்காட் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 67 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப், மஹ்லி பெர்ட்மன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியில் தொடக்க வீரர் ஃபின் ஆலன் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் சான் ஃபென்னிங் 29 ரன்களிலும், ஆரோன் ஹார்டி 28 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கூப்பர் கன்னொலி ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் ஆஷ்டன் டர்னர் 21 ரன்களிலும், நிக் ஹாப்சன் 15 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கூப்பர் கன்னொலி 4 சிக்ஸர்களுடன் 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now