
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டி மின்னல் காரணமாக 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தண்டர் அணியில் கேப்டன் டேவிட் வார்னர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஹக் வெய்ப்ஜென் 11 ரன்களிலும் என விக்கெட்ட இழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த மேத்யூ கில்க்ஸ் - சாம் பில்லிங்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் மேத்யூ கில்க்ஸ் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, சாம் பில்லிங்ஸ் 24 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஒலிவியர் டேவிஸ் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறவே, நிதானமாக விளையாடி வந்த ஒலிவியர் டேவிஸும் 36 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 19 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் டாம் கரண் மற்றும் உசாமா மிர் ஆகியோர் தால 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஸ்டார்ஸ் அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையாமல், வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.