
BBL 2021: Brisbane Heat defeat Hobart Hurricanes by 14 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 29 ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணியில் கிறிஸ் லின் 13, பெர்சன் 5, டக்கேட் 5, ஹெஸல்ட் 26, மேக்ஸ் பிரையண்ட் 9 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் பெஸ்லே அதிரடியாக விளையாடி 44 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது. ஹரிகேன்ஸ் அணி தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.