Advertisement

பிபிஎல் 2021: ஆண்ட்ரூ டை பந்துவீச்சில் சுருண்டது ஹாபர்ட் ஹரிகேன்ஸ்!

ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Advertisement
BBL 2021: Perth Scorchers' winning streak in the ongoing Big Bash League continues
BBL 2021: Perth Scorchers' winning streak in the ongoing Big Bash League continues (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 20, 2021 • 05:50 PM

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்தின. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 20, 2021 • 05:50 PM

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி குர்டிஸ் பேட்டர்சன் அதிரடியாக விளையாடி 78 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளையும் 167 ரன்களைச் சேர்த்தனர். ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி தரப்பில் தாம்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைக் இழந்து தடுமாறியது.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது. பெர்த் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports