
BBL 2021: Sean Abbott all-round performance helps Sydney Sixers comfortable victory (Image Source: Google)
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் தாமஸ் கெல்லி அதிரடியாக விளையாடி 41 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. சிட்னி அணி தரப்பில் சீன் அபேட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.