
BBL 2022: Adileide Strikers defeat Brisbane Heat by 71 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று 46 ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக வெதர்லட் 35 ரன்களையும், ஷார்ட் 27 ரன்களையும் சேர்த்தனர். பிரிஸ்பேன் அணி தரப்பில் வில் பிரிஸ்ட்வெட்ஜ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.