
BBL 2022: Hobart Hurricanes defeat Melbourne Renegades by 6 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 54ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி கேப்டன் மேத்யூ வேட், டி ஆர்சி ஷார்ட் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் மேத்யூ வேட் 48 ரன்களும், டி ஆர்சி ஷார்ட் 37 ரன்களையும் சேர்த்தனர்.