
BBL 2022: Perth Scochers post a totall on 171 of their 20 overs (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 11ஆவது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பெர்த் அணியில் குர்டில் பேட்டர்சன், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், காலின் முன்ரோ என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஆஷ்டன் டர்னர்- லௌரி எவன்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும அசத்தினர்.