
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 லீக் தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தண்டர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு ஜோ கிளர்க் - டாம் ரோஜர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கிளார்க் 11 ரன்களிலும், ரோஜர்ஸ் 14 ரன்களோடும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க அடுத்து வந்த பர்ன்ஸ் 18 ரன்களோடு ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் களத்திலிருந்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய நிக் லார்கின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, நட்சத்திர வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே எடுத்தது.