
BBL 2022: Watch: Indian-origin Australia bowler Gurinder Sandhu creates history with BBL hat-trick (Image Source: Google)
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மோதின. போட்டி தொடங்கும் முன் மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி குரிந்தர் சந்துவின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதில் குரிந்தர் சந்து ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனால் 18 ஓவர்கள் முடிவில் பெர்த் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்தது. தண்டர் அணி தரப்பில் குரிந்தர் சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.