
BBL: England batsman James Vince returns to Sydney Sixers (Image Source: Google)
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் 11ஆவது சீசன் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி இந்தாண்டு டிசம்பர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நடப்பு சீசனுக்கான சிட்னி சிக்சர்ஸ் அணியில் இங்கிலாந்தின் அதிரடி வீரர் ஜேம்ஸ் வின்ஸ் மீண்டும் இணைந்துள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி அசத்தியுள்ளார்.
இதன் காரணமாக நடப்பு சீசனிலும் சிட்னி சிக்சர்ஸ் அணி ஜேம்ஸ் வின்ஸை ஒப்பந்தம் செய்துள்ளது. இதுநாள் வரை 227 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் வின்ஸ் 7144 ரன்களை குவித்துள்ளார். அதில் இரண்டு சதமும், 44 அரைசதங்களும் அடங்கும்.