
BCCI Announce Squad For Test Series Against New Zealand, 5 Big Names Missing (Image Source: Google)
இம்மாத இறுதியில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று நியூசிலாந்துக்க்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதில் அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படும் ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பந்த், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி பங்கேற்கமாட்டார் என்பதால், அப்போட்டிக்கு மட்டும் அஜிங்கியா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.