உலகக்கோப்பையை வென்ற இந்திய அண்டர் 19 அணிக்கு ரொக்க பரிசு!
ஐசிசியின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்டர் 19 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.
உலகக்கோப்பை வென்ற இளம் இந்திய அணிக்கு நாடு முழுவதிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Trending
பிரதமர் ட்விட்டர் பதிவு "இளம் கிரிக்கெட் வீரர்களை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. ஐசிசியின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். தொடர் முழுவதும் துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான மற்றும் திறமையான கரங்களில் உள்ளதை இது வெளிப்படுத்துகிறது." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா 40 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி தனது ட்விட்டர் பதிவில்,“அண்டர் 19 அணிக்கும், துணைப் பணியாளர்களுக்கும், தேர்வுக்குழுவினருக்கும் உலகக் கோப்பையை அற்புதமாக வென்றதற்கு வாழ்த்துகள்...நாங்கள் அறிவித்த 40 லட்சம் ரொக்கப் பரிசு ஒரு சிறிய பாராட்டுக் குறிதான். ஆனால் அவர்களின் முயற்சி மதிப்பிற்கு அப்பாற்பட்டது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now