Advertisement

பிசிசிஐ நடத்தும் போட்டிகளின் புதிய ஸ்பான்சர்கள் அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (CAMPA)  மற்றும் ஆட்டம்பெர்க் (ATOMBERG) ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தமாகியுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan January 09, 2024 • 20:40 PM
பிசிசிஐ நடத்தும் போட்டிகளின் புதிய ஸ்பான்சர்கள் அறிவிப்பு!
பிசிசிஐ நடத்தும் போட்டிகளின் புதிய ஸ்பான்சர்கள் அறிவிப்பு! (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்கள் இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டன. ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (Campa) மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் (Atomberg Technologies) நிறுவனங்களை புதிய ஸ்பான்சர்களாக பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.

நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக இந்த இரு நிறுவனங்களும் செயல்படும். இந்த ஒப்பந்தம் வரவிருக்கும் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரிலிருந்தே ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending


இந்த ஒப்பந்தம் தொடர்பாக, "ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், இந்திய கிரிக்கெட்டின் அந்தஸ்தை உயர்த்தவும் இரண்டு உள்நாட்டு பிராண்டுகளான கேம்பா மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து செயல்படுவதில் பிசிசிஐ மகிழ்ச்சியடைகிறது" என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement