BCCI Announces India A Squad Against New Zealand A, Priyank Panchal To Lead The Side (Image Source: Google)
நியூசிலாந்து ஏ அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளைக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடர்களுக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவலும் வெளியானது.
இந்நிலையில் நியூஸிலாந்து ‘ஏ’ அணியுடன் 4 நாள் ஆட்டங்கள் மூன்றில் மோதவிருக்கும் 16 பேர் அடங்கிய இந்திய ‘ஏ’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குஜராத் வீரா் பிரியங்க் பஞ்சல் தலைமையிலான இந்த அணியில், திலக் வா்மா, முகேஷ் குமாா், யஷ் தயால் ஆகிய புதிய வீரா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்ட மேற்கு வங்க வீரா் அபிமன்யு ஈஸ்வரன், மத்திய பிரதேசத்தின் ரஜத் பட்டிதாா், மும்பையின் சா்ஃப்ராஸ் கான் ஆகியோரும் இந்த அணியில் இணைந்திருக்கின்றனா்.