
BCCI Announces India's Squad For Women's World Cup 2022 (Image Source: Google)
நியூசிலாந்தில் மார்ச் 4 முதல் மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் என மொத்தம் 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிதாலி ராஜ் தலைமையிலான அணியில் பிரபல வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்கஸ், ஷிகா பாண்டே ஆகிய இருவரும் இடம்பெறவில்லை. மேக்னா சிங், ரேணுகா சிங், யாஷ்திகா பாட்டியா ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.