
கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமீரகத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் மீதனான எதிர்பார்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறும் 15ஆவது சீசனில் 2 புது அணிகள் இடம்பெறும் என்ற பிசிசிஐயின் அறிவிப்பால் அத்தொடருக்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.
ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் கொண்ட தொடராக மாறவிருக்கிறது. இந்த 2 அணிகளையும் எந்த நிறுவனம் வாங்கப்போகிறது, எந்த நகரத்தை மையமாக கொண்டு 2 புதிய அணிகள் உருவாக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆனால் 2 புதிய அணிகளை வாங்குவதற்கு பிரபல தொழிலதிபர்களிடையே கடும் போட்டிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிசிசிஐ-க்கு பல கோடிகள் கொடுக்கவும் தயார் என முன் வருவதாக தெரிகிறது. இந்நிலையில் 2 அணிகளை வாங்குவதற்கான வழிமுறைகளை பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.