Advertisement

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; மீண்டும் கோலிக்கு ஓய்வு!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியிலிருந்து விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 30, 2022 • 22:21 PM
BCCI Announces Squad For ODI Series Against Zimbabwe; Rahul Tripathi Gets A Chance
BCCI Announces Squad For ODI Series Against Zimbabwe; Rahul Tripathi Gets A Chance (Image Source: Google)
Advertisement

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, ஜிம்பாப்வேவுக்கு சென்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Trending


இதனால் ஷிகர் தவான் இந்த அணியை வழிநடத்துகிறார். ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில் ஆகிய இருவரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஆகிய இருவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக எடுக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

காயத்தால் ஐபிஎல்லில் இருந்தே விளையாடாத தீபக் சாஹர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தீபக் சாஹரை போலவே காயத்திலிருந்து மீண்ட வாஷிங்டன் சுந்தரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகிய மூவரும், வேகப்பந்து வீச்சாளர்களாக ஷர்துல் தாகூர், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்..

இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement