இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சட்டேஷ்வர் புஜாராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், கொரோனா காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி ஆடமுடியாமல் போனது.
அந்த கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் 3டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது. ஜூன் 24 முதல் ஜூலை 17 வரை இங்கிலாந்தில் இருந்து இந்திய அணி ஆடவுள்ளது.
Trending
இந்த ஒரு டெஸ்ட் போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சீனியர் வீரர் புஜாரா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மோசமாக ஆடிவந்ததால் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் கடைசியாக இந்திய அணி ஆடிய டெஸ்ட் தொடரில் கழட்டிவிடப்பட்டனர்.
புஜாரா கவுண்டி கிரிக்கெட்டில் அபாரமாக ஆடியதன் விளைவாக மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால் ரஹானேவிற்கு இடம் கிடைக்கவில்லை. ரஹானேவின் கெரியர் முடிவுக்கு வந்துவிட்டது எனலாம்.
கேஎல் ராகுல் துணை கேப்டன். அவரும் ரோஹித்தும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக கில் எடுக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகியோரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.
விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டும் அவருக்கு மாற்றாக கேஎஸ் பரத்தும் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்பின்னர்களாக அஷ்வின் - ஜடேஜாவும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா மற்றும் ஷமியுடன் இளம் பவுலர்களான சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவும் எடுக்கப்பட்டுள்ளனர். உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, புஜாரா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), பரத் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஷமி, பும்ரா, சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா.
Win Big, Make Your Cricket Tales Now