
BCCI Chief Sourav Ganguly Lauds India's Win In England (Image Source: Google)
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி ஏற்கனவே டி20 தொடரை கைப்பற்றிய நிலையில் தற்போது ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதில் நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது அபாரமான ஆட்டம் காரணமாக 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா.
அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக் கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் சூழலில், இந்திய அணியின் இந்த தொடர்ச்சியான வெற்றி புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.