
வரும் 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மார்ச் 3ஆவது வாரத்தில் தொடங்கி மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிய விதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பிசிசிஐ பிக் பாஷ் லீக்கில் உள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ என்ற விதியை ஐபிஎல் தொடரிலும் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இம்பாக்ட் பிளேயர் என்ற கான்செப்டை பிசிசிஐ அறிமுகப்படுத்த விரும்புகிறது. அதில் பங்கேற்கும் அணிகள் டி20 போட்டியின் போது விளையாடும் லெவனில் ஒரு உறுப்பினரை ஆட்டத்தின் சூழலின் அடிப்படையில் மாற்றலாம்” என்று தெரிவித்துள்ளது.