
இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்திய அணி ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.
டி20 உலகக்கோப்பைக்காக உருவாக்கப்பட்டு வரும் இந்திய அணியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளவர் தினேஷ் கார்த்திக் தான். அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், இங்கிலாந்து தொடரில் சற்று சொதப்பியுள்ளார். முதல் போட்டியில் 7 பந்துகளில் 11 ரன்களும், 2ஆவது போட்டியில் 17 பந்துகளில் 12 ரன்களையும் மட்டுமே அடித்து ஏமாற்றினார்.
முதல் போட்டியில் அதிரடி காட்ட முயன்று அவுட்டான போதும், 2ஆவது போட்டியில் அவர் தேவையில்லாத ரன் அவுட்டால் விக்கெட்டை பறிகொடுத்தார். இல்லையென்றால் இந்திய அணிக்கு மேலும் 20 ரன்கள் வரை ஸ்கோர் உயர்ந்திருக்கும். இந்நிலையில் இதுகுறித்து தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.