
மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் பல ஆண்டுகள் விளையாடிய ஹர்திக் பாண்டியாவை கடந்த ஐபிஎல் தொடரின்போதே மும்பை அணி தக்கவைக்கவில்லை. இது ரசிகர்களுக்கு அப்போது வியப்பாக இருந்தது.
மும்பையின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்த ஹர்திக்கை மும்பை ஏன் தக்கவைக்கவில்லை என கேள்வி எழுந்தபோது, ஹர்திக் மும்பை அணியின் கேப்டனாக விரும்பியதாகவும், அதற்கு அந்த அணி சம்மதம் தெரிவிக்காததால் வெளியேற்றிவிட்டதாகவும் கூறப்பட்டது. அதன்பின் குஜராத் அணிக்கு கேப்டனாகி ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக், இப்போது இந்திய டி20அணிக்கு கேப்டனாகியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தான் களமிறங்க இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக பேசிய ஹர்திக் பாண்டியா, அடுத்த 20 ஓவர் உலக கோப்பைக்கான பயணத்தை இந்திய அணி இப்போதே தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.