
BCCI in hiring mode, invites applications for batting, bowling and fielding coaches at NCA (Image Source: Google)
தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் அமைந்துள்ளது. இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அக்டோபர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அப்பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியது.
இருப்பினும் இப்பதவிக்கு டிராவிட்டை தவிர மற்ற யாரும் விண்ணப்பிக்காத நிலையில், இப்பதவிக்கான விண்ணப்பங்களை அனுப்பும் தேதியை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
இந்நிலையில், தேசிய கிரிக்கெய் அகாடமியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களையும் பிசிசிஐ மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர்களாக இருந்த் 11 பேரையும் பிசிசிஐ மாற்றவுள்ளது.