
BCCI invites application for role of NCA cricket head (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட், இந்திய ஜூனியர், இந்திய ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்தார். அதன்பின் 2019ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள பிசிசிஐயின் தேசிய கிரிக்கெட் அகாதமியின் (என்.சி.ஏ.) தலைவராக நியமிக்கப்பட்டார்.
பிசிசிஐ விதிமுறைகளின்படி என்.சி.ஏ. தலைவராக ராகுல் டிராவிட் 2 வருடங்கள் மட்டுமே பணியாற்ற முடியும். அவருடைய ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து என்.சி.ஏ. தலைவர் பதவிக்கான புதிய விண்ணப்பங்களை தற்போது பிசிசிஐ கோரியுள்ளது.
மேலும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஆகஸ்ட் 15. இதையடுத்து என்.சி.ஏ. தலைவராக மீண்டும் பணியாற்ற பிசிசிஐக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பம் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.