
BCCI officials to leave for Oman and Dubai for T20 WC preparations (Image Source: Google)
நடப்பாண்டு இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்தது.
அதன்படி அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் மும்முறமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
டி20 உலகக்கோப்பை யுஏஇ மற்றும் ஓமனில் நடைபெற்றாலும், இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் முன்நின்று நடத்துகிறது. இதன் ஒருபகுதியாக டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்காக தயார் செய்யப்பட்டு வரும் மைதானங்கள் மற்றும் மற்ற நிலைமைகளை ஆராய பிசிசிஐ அலுவலர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 16, 17) நேரில் செள்ளவுள்ளனர்.