Advertisement
Advertisement
Advertisement

ஒரே நாட்டில் ஐபிஎல், டி20 உலக கோப்பை? - தகவல்

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர் ஆகியவற்றை ஒரே நாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 18, 2021 • 15:08 PM
BCCI planned to host IPL and t20 world cup in same country
BCCI planned to host IPL and t20 world cup in same country (Image Source: Google)
Advertisement


இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், இரு வாரங்கள் வெற்றிகரமாக கடந்த நிலையில் இரண்டாவது கட்டத்தை நோக்கி பயணித்தது. ஆனால் அதற்குள்ளாக பயோ பபுள் பாதுகாப்பில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து,  ஐபிஎல் தொடரை பாதியிலேயே பிசிசிஐ ஒத்திவைத்தது. மேலும் எஞ்சியுள்ள  போட்டிகளை நடத்துவது குறித்து இன்னும் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பிசிசிஐ தொடர்ந்து இந்த ஐபிஎல் தொடரை எங்கு நடத்தலாம் என்பது குறித்து விவாதித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் பிசிசிஐ தலைவர் கங்குலி இந்த ஆண்டு இறுதிவரை இந்தியாவில் இந்த ஐபிஎல் தொடரை நடத்த முடியாது என்று தெளிவாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

Trending


ஐபிஎல் தொடரே இந்தியாவில் நடக்காத வேளையில் டி20 உலகக் கோப்பையையும் இங்கு நடக்காது என்பது உறுதியாகி உள்ளது. இதனால் ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை என இரண்டு தொடர்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரே நாட்டில் வைத்து முடிந்துவிட வேண்டும் என்று பிசிசிஐ திட்டம் திட்டமிட்டு வருகிறது.

அந்த வகையில் இலங்கை, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியா மூன்று நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் இந்த தொடரை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இதில் ஏற்கனவே கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பிசிசிஐ சிறப்பாகத் திட்டமிட்டு ஐபிஎல் தொடரை முடித்து உள்ளது.

இதனால் இந்த ஆண்டு மீதமுள்ள ஐ.பி.எல் தொடரையும் அங்கேயே முடித்துவிட்டு அதுமட்டுமின்றி டி20 உலகக் கோப்பை தொடரையும் அங்கேயே நடத்தி விடலாம் என்று முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து வரும் நாட்களில் பிசிசிஐ அறிவிப்புகளும் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement