
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பிசிசிஐ கடைசி வாய்ப்பு ஒன்றை தந்துள்ளது. அண்மைக்காலமாக விராட் கோலி சரிவர விளையாட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் சதம் அடித்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் கூட விராட் கோலி ஒரு முறை கூட அரை சதம் அடிக்கவில்லை.
விராட் கோலியை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்துள்ளது. விராட் கோலியை உள்ளுர் கிரிக்கெட்டில் விளையாடச் சொல்லுங்கள் என முன்னாள் வீரர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்களுக்கு எதிரான ஒரு நாள், டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஃபார்மில் இல்லாத வீரருக்கு ஓய்வு ஏன் வழங்கினீர்கள் என முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் தான் பிசிசிஐ விராட் கோலிக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை வழங்கி இருக்கிறது.