ஐபிஎல் தொடர்ந்து நடைபெறும் - பிசிசிஐ திட்டவட்டம்!
கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து வெளியேற விருப்பம் உள்ள வீரர்கள் வெளியேறட்டும். ஆனால், ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடக்கும் என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து வெளியேற விருப்பம் உள்ள வீரர்கள் வெளியேறட்டும். ஆனால், ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடக்கும் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கரோனா வைரஸ் பரவல் 2ஆவது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகரித்து வரும் கரோனா அச்சம் காரணமாக, டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். தனது குடும்பத்தினர் கரோனா அச்சத்தில் இருப்பதால், அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Trending
அதேபோல் ராஜஸ்தான் அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டை, இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் கரோனா அச்சம், பயோ-பபுள் சூழல் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர்.
ஆர்சிபி அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சார்ட்சன் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் வெளியேறுவதாகத் தெரிவித்தாலும் இந்தியாவில் நிலவும் கரோனா வைரஸ் அச்சம்தான் காரணம் எனத் தெரிகிறது.
கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் பாதியிலேயே வெளியேறுவதால் தொடர் பாதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்தது.
இதுகுறித்து பிசிசிஐ மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், “ஐபிஎல் டி20 தொடர் வழக்கம் போல் நடக்கும். எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து நடைபெறும். கரோனா அச்சம் காரணமாக வெளியேற விரும்பும் வீரர்கள் தாரளமாக வெளியேறட்டும். அதற்காக தொடரை நாங்கள் கைவிட போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிசிசிஐயின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now