
BCCI Secretary Jay Shah Announces INR 5 Crore Cash Prize For Victorious India U19 Women's Team (Image Source: Google)
மகளிருக்கான அண்டர் 19 உலகக்கொப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக கோங்காடி வி த்ரிஷா 24, சௌம்யா மணீஷ் திவாரி 24, ஷபாலி வர்மா 15 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற அறிமுகத் தொடரிலேயே இந்தியா யு19 அணி சாம்பியன் ஆனது. இந்த வெற்றியையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.