
BCCI To Meet With Team Owners On Saturday; IPL Venue And Auction Main Points Of Discussion (Image Source: Google)
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கரோனா பாதிப்புக்கு இடையே நடந்து முடிந்ததால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை எந்த இடையூறும் இல்லாமல் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதற்கான விரிவான முன்னேற்பாடுகளை செய்யும் விதமாக அனைத்து காரணிகளையும் அலசி ஆராய்ந்து வருகிறது.
இந்தியாவில் நடத்தலாம் என்றால், கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால், இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன.
அப்படி நடத்தப்பட்டாலும், மும்பை உள்ளிட்ட ஒரு சில மைதானங்களில் மட்டுமே அனைத்து போட்டிகளையும் நடத்துவது குறித்தும் பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்தியாவில் நடத்த முடியாமல் போனால் வெளிநாடுகளில் நடத்தும் பிளான் பி திட்டமும் பிசிசிஐயிடம் உள்ளது.