
தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்படும் முன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை அறிவித்தபோது பிசிசிஐ சார்பில் யாரும் என்னிடம் பதவியை விட்டுச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்.
ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டியில், “டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகும் முன் தானும், தேர்வுக் குழுவினரும் கோலியிடம் பதவியிலிருந்து விலக வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம்” எனத் தெரிவித்தார். இருவரின் பேச்சிலும் முரண்பாடு இருந்ததால், பிசிசிஐ அமைப்புடன் நேரடியாக மோதலில் கோலி ஈடுபடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
விராட் கோலியின் பேச்சு குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேட்டபோது, கருத்து கூற மறுத்துவிட்டார். ஆனால், பிசிசிஐ இதை முறைப்படி அணுகும் என்று தெரிவித்தார்.