
Being Not In the 'Best Team Of England' Made Stuart Broad 'Upset' (Image Source: Google)
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான நியூசிலாந்து அணியும் நேற்று லண்டன் வந்தடைந்தது.
இந்நிலையில் கடந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தான் வெளியேற்றப்பட்டது மிகவும் வருத்தமளிப்பதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடந்த ஆண்டு நான் அதிருப்தி அடைந்தேன், ஏனெனில் கோடை காலத்தின் முதல் டெஸ்ட் போட்டியில் எங்களது சிறப்பான அணி விளையாடவுள்ளது என்று தேர்வாளர்கள் கூறியிருந்தனர். ஆனால் அச்சிறப்பான அணியில் எனது பெயர் இடம்பெறாதது மிகவும் வருத்தமளித்தது.