
Being out of quarantine , says Axar Patel (Image Source: Google)
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல். இவர் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் பரிசோதனையில், அக்ஷர் பட்டேலுக்கு தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இருப்பினும் தொற்றால் பாதிக்கப்பட்ட அக்ஷர் பட்டேல், தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் அவரது தனிமைப்படுத்துதல் காலம் முடிந்ததையடுத்து, அவர் டெல்லி அணியுடன் இணைந்துள்ளார். அக்ஷர் பட்டேல் அணியில் இணைந்த செய்தியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி காணொலியாக வெளியிட்டு, அவரை வரவேற்பதாக பதிவிட்டுள்ளது.